Saturday 23 May, 2009

நூலைப் போல சேலை..(47)

மக்களவைத் தேர்தலில் 10 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் ஒரு இடத்தில் கூட வெல்லாமல் தோல்வியடைந்தார் தேமுதிக தலைவர் விஜய்காந்த் .

அதே போல தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முதல் நாள் வெளியான பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் விஜயகாந்த்தின் மூத்த மகன் பிரபாகரனும் தேர்ச்சி பெறவில்லை.

இதனால் அப்செட் ஆகி விட்டாராம் கேப்டன் . இதையடுத்து அவருக்கு நியமிக்கப்பட்ட டியூஷன் ஆசிரியரை அழைத்து கடிந்து கொண்டாராம்.


Thanks : Thatstamil.com

Thursday 21 May, 2009

நாட்டு நடப்பு.. (46)

நரேஷ் குப்தா மாடு மேய்க்க தான் லாயக்கு - ராமதாஸ் தாக்கு

***

இந்த தேர்தலின் போது 2 இடங்களில் வாக்குப்பதிவுக்கு முன்பதாக அதிகாரிகள் ஓட்டு போட்டு சோதனை செய்தனர். அப்போது ஒருவருக்கு போட்ட ஓட்டு மற்றவருக்கு விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 2 இயந்திரங்களையும் உடனே மாற்றிவிட்டனர்.

- நரேஷ் குப்தா வாக்குமூலம்

(அப்படீன்னா ஜெ. சொன்னது உண்மைதானா? அப்படியெல்லாம் நடக்கவே வாய்ப்பில்லைன்னு பீலா விட்டானுங்க!)

***
தி.மு.க.வுக்கு மத்திய அமைச்சரவையில் ஆப்பு

அகதி முகாமில அந்தாளை தள்ளுங்கப்பா(45)

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் சிறப்புப் பிரதிநிதியாக கொழும்பு வந்துள்ள விஜய் நம்பியார், இடம் பெயர்ந்த தமிழர்களுக்காக இலங்கை அரசு அமைத்துக கொடுத்துள்ள முகாம்களில் சிறப்பான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக பாராட்டித் தள்ளியுள்ளார்.

போர் முனையில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காக பான் கி மூனால் சில நாட்களுக்கு முன்பு கொழும்புக்கு அனுப்பப்பட்டிருந்தார் விஜய் நம்பியார். ஆனால் இவர் வந்து சேருவதற்குள்ளாகவே (நியூயார்க்கிலிருந்து நேராக கொழும்புக்கு வராமல் இடையி்ல் டெல்லி சென்று விட்டு கொழும்புக்கு வந்தார் விஜய் நம்பியார்) வன்னிப் பகுதியில் அனைத்தையும் முடித்து விட்டது இலங்கை ராணுவம் .

இந் நிலையில், மாணிக் பார்ம் பகுதியில் உள்ள இடம் பெயர்ந்தோருக்கான முகாம்களை விஜய் நம்பியார் பார்வையிட்டார்.

அப்போது இலங்கை அரசு மேற்கொண்டுள்ள நல்வாழ்வு நடவடிக்கைகள், பிற திட்டங்கள் குறித்து கேட்டறிந்தாராம்.

அப்போது முகாம்களில் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக பாராட்டு தெரிவித்தாராம் விஜய் நம்பியார்.

விஜய் நம்பியாரின் சகோதரர்தான் சதீஷ் நம்பியார். இவர் ராஜீவ் காந்தி- ஜெயவர்த்தனே இடையிலான ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை சென்ற இந்திய அமைதி காக்கும் படையில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் என்பது நினைவுகூறத்தக்கது.

செய்தி நன்றி : thatstamil.com

****

இந்தாளை ஒரு வாரத்துக்கு அகதி முகாமிலே உட்கார வெச்சு சாப்பிட்டு தூங்க சொல்லுங்கப்பா. அதான் நல்லா இருக்குன்னு அவரே சர்ட்டிபிகேட் கொடுத்திருக்காரே!

சாவே! உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ?(44)

சீரிய நெற்றி எங்கே?
சிவந்தநல் இதழ்கள் எங்கே?
கூரிய விழிகள் எங்கே?
குறுநகை போன தெங்கே?
நேரிய பார்வை எங்கே?
நிமிர்ந்த நன்நடைதான் எங்கே?
நிலமெலாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்ததிங்கே

அம்மம்மா என்ன சொல்வேன்
அண்ணலைத் தீயிலிட்டார்
அன்னையைத் தீயிலிட்டார்
பிள்ளையைத் தீயிலிட்டார்
தீயவை நினையா நெஞ்சைத்
தீயிலே எரிய விட்டார்
தீய சொல் சொல்லா வாயை
தீயிலே கருகவிட்டார்.

பச்சைக் குழந்தை
பாலுக்குத் தவித்திருக்க
பெற்றவளை அந்தப்
பெருமான் அழைத்து விட்டான்
வானத்தில் வல்லூறு
வட்டமிடும் வேளையிலே
சேய்க் கிளியைக் கலங்கவிட்டு
தாய்க் கிளியைக் கொன்றுவிட்டான்


சாவே! உனக்கொரு நாள்
சாவு வந்து சேராதோ
சஞ்சலமே! நீயுமொரு
சஞ்சலத்தைக் காணாயோ
தீயே! உனக்கொரு நாள்
தீ மூட்டிப் பாரோமோ
யாரிடத்துக் போயுரைப்போம்?
யார் மொழியில் அமைதி கொள்வோம்?
யார் துணையில் வாழ்ந்திருப்போம்?
யார் நிழலில் குடியிருப்போம்?

வேரோடு மரம் பறித்த
வேதனை எம்மையும் நீ
ஊரோடு கொண்டு சென்றால்
உயிர்வாதை எமக்கிலையே
நீரோடும் கண்களுக்கு
நிம்மதியை யார் தருவார்
தலைவன் இல்லா நாட்டினை
நினைவில் யார் வைத்திருப்பார்?

ஐயையோ காலமே
ஆண்டவனே எங்கள் துயர்
ஆறாதே ஆறாதே
அழுதாலும் தீராதே

கை கொடுத்த நாயகனை
கைப் புறத்தே மறைத்தாயே
கண் கொடுத்த காவலனைக்
கண் மூட வைத்தாயே
கண்டதெல்லாம் உண்மையா
கேட்டதெல்லாம் நிஜம்தானா

கனவா கதையா
கற்பனையா அம்மம்மா
தலைவனா மறைந்தார், இல்லை!
நேர்மைக்குச் சாவே இல்லை!
அழிவில்லை முடிவுமில்லை
அன்புக்கு மரணமில்லை
இருக்கின்றார் தலைவன்
இங்கே தான்!
இங்கே தான்!

எம்முயிரில் - இரத்தத்தில்
இதயத்தில் நரம்புகளில்
கண்ணில் - செவியில்
கைத்தலத்தில் இருக்கின்றார்
எங்கள் தலைவன்
எமைவிட்டுச் செல்வதில்லை
என்றும் அவர் பெயரை
எம்முடனே வைத்திருப்போம்
அம்மா.... அம்மா.... அம்மா....


நன்றி : விகடன் & கவியரசு கண்ணதாசன்

(சற்றே மாற்றம் செய்யப்பட்டது)

Tuesday 5 May, 2009

தமிழினத் தலை - பெயர் மாற்றம் (43)

தனக்குத் தானே 'தமிழினத் தலை'ன்னு பெயர் வைத்துக் கொண்ட பெரிசின் பெயரை இப்போது உலகமெங்கும் உள்ள தமிழர்கள் இப்படித் தான் உச்சரிக்கிறார்கள்.

- தமிழீனத் தலைவன் (தமிழ் ஈனத் தலைவன்)

உனக்கு வந்தா ரத்தம், எனக்குன்னா மட்டும் தக்காளிச் சட்னியாடா? (42)

"என்னோட நைனாவுக்கு உடம்பு சரியில்லன்றத அந்தம்மா நையாண்டி பண்ணுது" என்று ஒரு ஆள் ஊர் முழுக்க புலம்பி வருகிறார்.

எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவமனையில் இருந்த போது இவரோட நைனா இங்கே என்னவெல்லாம் கதை அளந்தார். அப்போது 'பொது வாழ்வில்' இருந்ததாக இருந்த இந்த நபர் என்னத்த புடுங்கிக் கொண்டிருந்தார். 'நைனா, நைனா, தமிழ்ப் பண்பாட்டின்படி நாம் அப்படியெல்லாம் பேசக்கூடாது' என்று அட்வைஸ் செய்திருக்க வேன்டியது தானே?

வடிவேலு சொல்ற மாதிரி, 'உனக்கு வந்தா ரத்தம், எனக்குன்னா மட்டும் தக்காளிச் சட்னியாடா?'

Sunday 26 April, 2009

தட்சிணாமூர்த்தியின் நகைச்சுவை உண்ணாவிரதம் (41)

"தலைவரே, மோசம் போயிட்டோம்"

"என்னய்யா அது?"

"உளவுத் துறை ரிப்போர்ட்படி நமக்கு நாப்பதுலயும் நாமம் தானாம்"

"என்னய்யா சொல்ற?"

"ஆமாம். சாதாரணமாவே நம்ம ஆட்சி மேல மக்களுக்கு ஏகக் கடுப்பு. கடைசியா இலங்கை பிரச்னை வேற இப்போ ரொம்பவே ஆட்டிப்படைக்குது"

"இப்படி ஆவும்னு முன்னமே தெரிஞ்சிருத்ந்தா 'நாங்க ஆட்சிக்கு வந்தா தனி ஈழம் அமைய ஆதரவளிப்போம்னு' சொன்ன ஆண்டிப் பண்டார கட்சிக்கிட்ட ஓடியிருக்கலாமேய்யா"

"ஹூம். டூ லேட் தலைவரே. அந்தம்மா தானாவே அந்த அறிக்கையெல்லாம் விட்டுடிச்சி. நீங்க என்னடான்னா 'நண்பரு. துரோகி, போராளி, பெருச்சாளின்னு' காமெடி பண்ணிட்டு இருக்கீங்க. நீங்க பண்ற காமெடியினால வடிவேலுவுக்கு இப்போவெல்லாம் படத்துலே சான்ஸே கெடைக்கலயாம். எப்பவும் ஆட்சி போனப்புறம் படத்துக்கு வசனம் எழுதுறேன் பேர்வழின்னு படுத்தி எறிவீங்க. இனிமே காமெடியனா நடிங்க. சூப்பரா பொருந்திடும்"

"என்னய்யா செய்யலாம்?"

"பேசாம கூட்டணியில இருந்து வெளில வந்திடுங்க. ரெண்டு மூணு சீட்டாவது ஜெயிக்கலாம். புள்ள, பேரனெல்லாம் டெபாசிட் காலியானா நல்லாவா இருக்கும்?"

"இனிமே வர முடியாதேய்யா"

"உங்களுக்கா தெரியாது? உண்ணாவிரதம் இருக்கேன்னு உட்காந்திடுங்க. அவங்களாவே தொறத்திடுவாங்க. 'ஐயையோ.. கொல்றாங்களே'ன்னு சவுண்டு விட்டுக்கலாம்"

"சூப்பர் ஐடியாய்யா. வாழ்க்கையிலயே இப்போ தான் உருப்படியா ஒரு யோசனை சொல்லிருக்க"

'ஐயையோ கொல்றாங்களே.. ஐயையோ கொல்றாங்களே' - சப்தத்தைக் கேட்டு உடனடியாக இத்துப் போன டி.வி & பேரன் டி.வி.களில் 'அராஜக மத்திய அரசு அட்டகாசம்' என்று செய்தி ஓடுகிறது.