Saturday 14 March, 2009

என்னது, தொப்புள் கொடி உறவா?(37)

தொப்புள் கொடி உறவு

- இந்த ஒரு வார்த்தை கடந்த சில மாதங்களாக பாடாய்ப் பட்டு வருகிறது.

அதென்னப்பா தொப்புள் கொடி உறவு?

நாமும் தமிழ் தான் பேசுகிறோம், அவனும் தமிழ் தான் பேசுகிறான். அதனால தொப்புள் கொடி உறவு என்கிறீர்களோ?

பிரிட்டிஷ்காரனும், அமெரிக்காகாரனும் இதே ரீதியில் தான் தொப்புள் கொடி உறவு போல.

உலகத்திலே எங்கே தமிழனுக்கு பிரச்னை என்றாலும் உடனடியாக இந்த தொப்புள் கொடி உறவு டயலாக் ஆரம்பித்து விடுகிறது.

அடப்பாவிகளா.

உங்களுக்கு கஷ்ட காலம் வரும் போது தான் தொப்புள் கொடி உறவு என்று ஒன்று இருக்கிறதாக தெரிய வருகிறதா?

நல்லா சம்பாதித்து கொழிக்கும் போதெல்லாம் நம் தமிழ் இன தொப்புள் கொடி உறவுகள் அங்கே தாய்த் தமிழகத்தில் சிரமப்பட்டு வருகிறார்களே, அவர்களுக்கு உதவுவோம் என்று என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா?

மலேசியாவில், இலங்கையில், சிங்கப்பூரில் என எங்கே போனாலும் எங்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களை நீங்களே மூன்றாம் தர அடிமைகளாகத் தானே நடத்தி வந்தீர்கள்?

நீங்கள் நன்றாக இருந்த காலத்தில் எங்கள் தாய்த் தமிழகத்திற்கு உங்களால் தம்படி பைசா வருமானம் உண்டா?


ஜப்பான்காரனும், அமெரிக்காகாரனும் தங்களுக்கு சம்பந்தமில்லாத ஆசிய நாடுகளில் கூட தங்கள் சொந்த காசை செலவிட்டு பாலங்கள், பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள் என்று பலவற்றை செய்து கொடுத்திருக்கிறார்கள். அப்படி நீங்கள் ஏதாவது இங்கே கிழித்திருக்கிறீர்களா?

அதாகப்பட்டது நீங்கள் நன்றாக இருக்கும் காலத்தில் எங்களை கேவலமாகத் தான் பார்த்தீர்கள், பார்க்கிறீர்கள். உங்களுக்கு கஷ்டம் வரும் போது மட்டும் நாங்கள் எங்கள் கவலைகளையெல்லாம் மறந்து விட்டு உங்களௌக்கு உதவ ஓடி வர வேண்டும்.

என்னங்கப்பா நியாயம் இது?

Wednesday 11 March, 2009

தங்கபாலு எந்த விதத்தில் குறைச்சல்? (36)

காங்கிரஸ் கட்சியின் (இன்றைய) தமிழ் மாநிலத் தலைவர் தங்கபாலு, ம.தி.மு.க. தலைவர் குறித்து 'இந்தியராக இருக்க தகுதியில்லை' என்று சொன்ன கருத்து உண்மையிலேயே நகைச்சுவைக்குரிய வசனம் தான். காங்கிரஸ் கட்சியில் கோஷ்டியே கிடையாது, மஞ்சள் துண்டு அணிந்திருப்பது பகுத்தறிவுக் காரணம் தான், மருமகளின் திடீர் பெயர் மாற்றத்திற்கு காரணம் நியூமராலஜி இல்லை என்பதையெல்லாம் தாண்டிய உலக மகா ஜோக் என்பதில் மறு கருத்தில்லை.

ஆனால் உடனே 'இந்திய சர்டிபிகேட் வாங்க தங்கபாலுவை அணுகவும்' என்று சில கால்வேற்காடுகள் எழுத ஆரம்பித்து விட்டன. இது அதைத் தாண்டிய ஜோக்.

தட்சிணாமூர்த்திக்கே தமிழன் சர்ட்டிபிகேட் கொடுக்க உரிமை இருக்கும் போது தங்கபாலுவிற்கு இந்தியன் சர்ட்டிபிகேட் கொடுக்க தகுதி இருக்காதா என்ன?

Monday 2 March, 2009

நிலவரம்-1 (35)

ஏதோ ஈழத் தமிழர்களுக்கு தாங்கள் தான் வாழ்வளிக்கப்போகும் வள்ளல் போல நினைத்துக் கொண்டு ரவுடிக் கும்பல் சம்பந்தமேயில்லாமல் நீதிமன்றத்தில் புகுந்து சுப்பிரமணியசாமி மேல் முட்டை வீசியது. ஒரு முட்டை வீச்சுக்கே கை மேல் பலன் கிடைத்து 'தக்காளிச்சட்னி' அபிசேகம் வாங்கிய புகைப்படங்களைப் பார்த்து தமிழ்நாடே ரசித்தது. 'வ**ளி, வேணும்டா இவனுங்களுக்கு' என்று மகிழாதவர்களே கிடையாது. மானம்கெட்டவர்களா என்ன காவல் துறையினர்? பின்னிப் பெடலெடுத்தார்கள். சமாதானக் கொடி பறக்க விட்டானாம் நடுவில் ஒருத்தன். வெண்ணைகளா. 'இதுதான்டா போலீஸ்' என்று புரிய வைத்த காவல் துறையினருக்கு பாராட்டுகள்.
***

தமிழ்நாட்டில் ஆங்காங்கே விஷமிகளால் வன்முறை விஷவிதைகள் தூவப்படுகின்றன. ராஜீவ்காந்தியை கொலைகாரன் என்றெல்லாம் ஓரணாவுக்கு பிரயோசனமில்லாதவனெல்லாம் பேசி 'உள்ளே' போயிருக்கிறான்.

ஆனால் அந்தப் பேச்சையெல்லாம் இங்கே வலைப்பதிவில் அப்படியே பிரசுரித்தவர்களை ஒன்றும் செய்யவில்லை. சிங்கப்பூரில் உட்கார்ந்து கொண்டெல்லாம் சிலர் 'கோவி', சாரீ, கூவுகிறார்கள். பத்து நாள் முன்னாடி ஊரூக்குதான் வந்தில்ல? இங்க இருந்து குரல் கொடுக்க வேண்டியது தானே? ரொம்ப தைரியம்பா உனக்கு!