Saturday 31 January, 2009

'துர்கா' போய் 'சாந்தா'(14)

எனக்குத் தெரிந்த ஒருவரின் மனைவியின் பெயர் 'துர்கா'. அவருக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகி விட்டன. பேரக்குழந்தைகுளும் பிறந்தாச்சு. இப்போது திடீரென சொல்லாமல் கொள்ளாமல், மனைவியின் பெயரை 'சாந்தா' என்று மாற்றிவிட்டிருக்கிறார்.

இது தெரியாமல் 'இது யாருப்பா சாந்தா? ரெண்டாவது கல்யாணம் கட்டியாச்சா?' என்று கேட்டேன்.

'அதெல்லாம் இல்லை. துர்கா என்பது பல ஆயுதங்களை தாங்கி நிற்கும் கடவுளின் பெயர். அதை மாற்றி சாந்தமான அம்மனின் பெயர் வேண்டும் என்று என்னுடைய தந்தை விருப்பப்பட்டார். அதனால் தான் மாற்றியிருக்கிறேன்' என்றார் நண்பர்.

அவரது தந்தை ஒரு பகுத்தறிவு'வியாதி'. எனவே அப்படி சொல்லியிருப்பதில் வியப்பில்லை!

'பகுத்தறிவில இதெல்லாம் சாதாரணமப்பா!

Friday 30 January, 2009

கெளப்புங்கடா காவிரி, ஒகேனக்கல் பிரச்னையை (13)

இந்த கர்நாடகா காரணங்களுக்கு ரொம்பவே நக்கல் ஜாஸ்தி. அவனவன் - முக்கியமா நம்ம போர்க்காட்டார் - இங்கே ஒரு மணி நேர மின்சாரத்துக்கே சிங்கி அடிச்சுக்கிட்டு இருக்காரு. அவங்க என்னடான்னா 24 மணி நேரமும் மின்சாரம், அதுவும் கிராமங்களுக்கும் அப்படீன்னு சொல்லி வயித்தேறிச்சலை கெளப்பறானுங்க.

http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=6756&cls=row4&ncat=IN

அவனுங்கள விடக்கூடாது. கெளப்புங்கடா காவிரி, ஒகேனக்கல் பிரச்னையை!

Thursday 29 January, 2009

பத்திரிகையாளரா? (12)

இலங்கையில் நடக்கும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கே ஒரு உயிர் தன்னையே மாய்த்துக் கொண்டிருக்கிறது. வருத்தமான நிகழ்வு தான்.

அதை உடனடியாக வெளியிட்டுள்ள 'ஹிந்து' பத்திரிகை, "தமிழ் பத்திரிகை அலுவல ஊழியர் மரணம்" என்று உள் செய்தியிட்டு 'ஒரு மனிதன் தற்கொலை' என்று செய்தி வெள்யிட்டுள்ளது.

அதையும் கூட தவறு என்று சில மன நோயாளிகள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

அவர் பத்திரிகை அலுவலகத்தில் டி.டி.பி. ஆப்பரேட்டராக பணி புரிந்தவர் தானே? அவர் எப்படி பத்திரிகையாளராக முடியும்?

அப்படியெனில் கருணாநிதிக்கு காரோட்டுபவரும், அவர் வீட்டு வாட்ச் மேனும் கூட அரசியல்வாதி / முதல்வர் என்று சொல்லிக் கொள்ளலாமா?!

போங்கடா நீங்களும் உங்க நியாயமும்!

Wednesday 28 January, 2009

எமது அடுத்த வெளியீடு : மவுன விரதம் (11)

ஏற்கனவே எங்காளுல ஒருத்தரு நாலு நாள் சாவும் வரை உண்ணாவிரதம் இருந்ததிலயே இலங்கை அரசாங்கம் ஆடிப்போயிடிச்சு தெரியுமில்ல?

இப்போ போதாக்குறைக்கு நாங்க ஒரு ஏழெட்டு பேரு சேர்ந்து மவுன விரதம் இருக்கப் போறோம். அப்போ பாருங்க ஐ.நா. சபையே நடு நடுங்கும். கிடு கிடுக்கும்.

(அடப்போங்கய்யா வெண்ணைகளா, அந்த மவுன விரதத்தை தான் பல நாளா தட்சிணாமூர்த்தி இருக்காரே!)

முனிசிபாலிட்டி யானை பொழச்சிடுச்சாம் (10)


Safe home

இலங்கை (9)

இலங்கையில் அப்பாவி பொதுமக்களை அநியாயமாக சாகடிக்கும் ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அநியாயவாதிகளுக்கு கடும் கண்டனங்கள்.

நாகரிகம் தெரியாத கம்னாட்டிகள் (8)

முன்னாள் ஜனாதிபதி திரு ஆர். வெங்கட்ராமன் மறைந்து விட்டார். அவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் பேர்வழி என்று சில கபோதிகள் கன்னாபின்னாவென்று கிறுக்கியிருக்கிறார்கள். ஒருவன் எவனோ எதையோ சொன்னான் என்று சொல்லி அவரை திட்டியிருக்கிறான். கேட்டால், "நம் நாட்டில் தான் இறந்து விட்டால் புகழ வேண்டும் என்று சொல்கிறார்கள்" என்று பதில் வேறு. ஏன்டா வெண்ணை, நீ இருக்கிறது நம் நாட்டில் தானேடா? மேலை நாடுகளில் ஒருத்தி பலரோடு போவாள் என்று உன் அம்மாவையோ, சகோதரியையோ, மனைவியையோ சொல்லுவியா? நம்மூரில் இருக்கும் போது நம்மூரில் என்ன பழக்கமோ அதைத் தான் செய்ய வேண்டும். எவனோ சொன்னதை கிறுக்கியிருக்கான் பாடு. அந்த எவனோ கபோதி உன் குடும்பத்தினரைப் பற்றி கேவலமாக சொன்னான். அதையும் எழுதேன்.

இன்னொருத்தனோ அவர் பிராமணர் என்பதினாலேயே தரக்குறைவாக எழுதியிருந்தான். நேரம் தான்.

பன்றிகளுக்குத் தெரியுமா பன்னீர் வாசனை?

Friday 23 January, 2009

தட்சிணாமூர்த்தியும் அறிக்கை ஸ்டண்ட்டும் (7)

நாளையே அத்தைக்கு மீசை முளைக்கும் - அதுவும் தேவாரம், வீரப்பன், கோபால் போல பெரிதாக முளைக்கும் என்று யாராவது வாக்குறுதி அளிப்பார்களேயானால் அடுத்த நிமிடமே ஆட்சியை துறக்கத் தயார் என்று தட்சிணாமூர்த்தி அறிவித்துள்ளார்.

இதற்கு வழக்கம் போல அல்லக்கைகள் 'சூப்பருப்பா, ஆட்சியே போனாலும் பரவாயில்லன்னு அறிக்கை விட்டுட்டாருப்பா' என்று புளகாங்கிதம் அடைந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சிந்தனைத் திறன் அம்புட்டு தான்.

வேறென்ன சொல்ல?!

Thursday 22 January, 2009

தட்சிணாமூர்த்தியும் ஆங்கிலப் பிறந்தநாளும்(6)

மூச்சுக்கு முன்னூறு தடவை தமிழ் என்று சொல்லி கஞ்சி குடித்துக் கோண்டிருக்கும் தட்சிணாமூர்த்தி தனது பிறந்த நாளை மட்டும் ஆங்கிலத் தேதிப்படி கொண்டாடுவது ஏன் என்று நியாயமான கேள்விக்கு பதில் தர முடியாத வக்கில்லாத அல்லக்கைகள் 'அம்மையார் மட்டும் அப்படிக் கொண்டாடலாமா?' என்று வழக்கமான பதில் கேள்வி எழுப்பி தங்களது அழுக்குப் புத்தியை மீண்டும் காண்பித்திருக்கிறார்கள்.


கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க பன்னாடைங்களா.

Wednesday 21 January, 2009

சம்திங் ராங்க்! (5)

ஒரு பொம்பளையும் பொம்பளையும் சேர்ந்து இருந்தா கண்டபடி பேசுறானுங்களே. அதுவே சதா சர்வகாலமும் கூடவே ஒரு ஆளு தேவைப்பட்டுகிட்டே இருக்கே? 'உங்க சாவகாசமே வேணாம்னு' சொல்லிட்டு ஓடிப்போற ஆளக்கூட கூடவே போய் கெஞ்சி கூத்தாடி திரும்ப கொண்டு வர்றாங்களே. அது ஏன்னு யாராச்சும் கேள்வி கேக்குறீங்களா? சம்திங் ராங்க்!

கேள்வி(யும் நானே), பதில்(-ம் நானே) (4)

பத்திரிகையாளர்களை என்ன தான் திட்டினாலும், காறித் துப்பினாலும், நீதான்டா கொலைகாரன் என்று புழுதி வாறித் தூற்றினாலும் அவர்கள் எதற்கும் அசராமல் அடுத்த தபா பார்க்கும் போது என்னை கோபமூட்டும்படியான கேள்விகளை கேட்டுத் தொலைக்கிறார்கள். பத்திரிகையாளர்களுக்கு நான் ரொம்ப நெருக்கம் என்ற ஒரு இமேஜை என்னுடைய அல்லைக்கை பத்திரிகையாளர்களைக் கொண்டு உருவாக்கி வைத்திருக்கிறேன். இருந்தாலும் அதெல்லாம் செல்லுபடியாகவில்லை. எனவே அடிக்கடி, அதுவும் எனக்கு பிரச்னை என்று வரும் போதெல்லாம் எனக்கு நானே கேள்வி கேட்டு அதற்கு பதிலாக அனைவரையும் திட்டி எழுதுவேன் என்று அறிவித்துக் கொள்கிறேன்.

நேரடியாக பத்திரிகையாளர்களை சந்திக்கும் போதெல்லாம் நான் டென்ஷனாகிவிடுவதால் இந்த ஏற்பாடு. ஆனால் நான் பத்திரிகையாளர்களுக்கு ரொம்ப நெருக்கமாக்கும்!

Monday 19 January, 2009

டேட்டா பேஸ் (3)

நாட்டுல இருக்கிற அத்தனை கட்சியிலயும் இருக்கிற அத்தனை பேரோட ஜாதி என்ன அவங்க குலம், கோத்திரம் என்னன்னு எனக்கு ஒரு லிஸ்டு வேணும்ப்பா. நான் ஒரு பகுத்தறிவாதி. எனக்கு இந்த ஜாதி, மதமெல்லாம் கிடையாது. என் போன்டாட்டி என்னோட ஜாதியாவே இருக்கிறது என்னோட தப்பில்ல. எங்க ஊட்டுல கட்டி வெச்சிட்டாங்க. என்னோட நாலாவது வைப்பாட்டி ஒரு தாழ்ந்த ஜாதிக்காரர் தான். என்னோட ரெண்டாவது துணைவியோட மூத்த பையன் சம்சாரம் எங்க சாதின்னு சொன்னாலும், அவங்களோட பையன் கட்டிக்கிட்டது ஒரு ஐயர் பொண்ணைத் தான். எதுக்கு சொல்ல வர்ரேன்னா, எனக்கு இந்த ஜாதி வித்தியாசம் பாக்குறது எல்லாம் புடிக்கவே புடிக்காது. ஆனா நாளைக்கே நடிகனாகி, அரசியல்வாதியாகிட்டா எதிர்கட்சிக்காரன்களை திட்டி கவிதை எழுதணும். அதுக்காக அவங்க எந்த ஜாதின்னு ஒரு லிஸ்ட் வேணும். தயார் பண்ணி அனுப்பூங்கப்பா.

என்ன செய்யலாம்? (2)

அ.இ.க.ச.மா.மு.க. க.க.அ.ர.க.ம.க. ப.அ.க.உஎ.க.டு.ம.க ல.க.ரு.க.ம.க ட.டொ.டி.டை.டூ.க மு.பு.கொ.எ.க - கட்சி ஆரம்பிச்சா பேரு வைக்கணுமில்ல.

பொம்பள கொழந்தையா இருந்தா பிரேமா, அடடே ஆம்பளக் கொழந்தையா பிரேமானந்தான்னு வையின்னு சொல்லிட்டு போவ இது என்ன தொண்டனோட கட்சியா? மண்டய பிச்சுகிட்டு உட்காந்திருக்கேன் மக்கா. மச்சான், மாப்ளே, தங்கமணி, அவங்க சொந்தக்காரங்க எல்லாரையும் கூப்பிட்டு பொதுக்குழுவில விசாரணைய வெச்சு கட்சிக்கு பேரு யோசிக்கணும்பா.

என் மயிரினும் கீழான மக்களே.

உங்கள் மீது என் மயிரின் மீது வைத்திருக்கும் மதிப்பை விட பல அளவு கீழாகத்தான் வைத்திருக்கிறேன். 

ஆமாம்.

ஒரு நாளைக்கு பல முறை பார்த்து பார்த்து தலை வாறிக்கொள்கிறேன். அதை விட உங்கள் மீது மதிப்பு அதிகம் வைத்தால் நயா பைசாவிற்கு பிரயோசனம் உண்டா என்ன?

கூடிய சீக்கிரம் நான் சினிமாவில் நடிக்கப் போகிறேன். இரண்டு படங்கள் ஊத்திக் கொண்டவுடன் அரசியலில் குதிக்கப் போகிறேன். அரசியல் சாக்கடையை சுத்தப் படுத்தப் போகிறேன். எப்படி என்பதை இப்போது சொல்ல மாட்டேன். அதை சொல்லிவிட்டால் அனைத்து கட்சியினரும் அதை காப்பி அடித்து விடுவார்கள்.

அரசியலில் பப்பு வேகாவிட்டால் இருக்கவே இருக்கிறது உலகத் தமிழர்கள் பிரச்னை. தமிழனுக்கு எங்கே தான் பிரச்னை இல்லை? உள்ளூர்த் தமிழர்கள் எல்லாம் குலு குலுவென வாழ்ந்து வருவதால் சர்வதேச தமிழர்கள் பிரச்னையை கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் பிரச்னைக்காக சாகும் வரை உண்ணாவிரதம் நான்கு நாட்கள் நடத்தப் போகிறேன். அதற்கும் சரிவராவிட்டால் உள்ளூர் பஸ்களை உடைப்போம், ரயிலை நிப்பாட்டுவோம், சகஜ நிலையை நாசமாக்குவோம். உள்ளூர்த் தமிழர்களின் அன்றாட வாழ்க்கை எப்படி போனால் என்ன, எங்களுக்கு தேவை உலகத் தமிழர்களின் நிம்மதி மட்டும் தான். முதல் பதிவுக்கு இவ்வளவு போதும், மீதியை விரைவில் பார்ப்போம்.