Sunday 26 April, 2009

தட்சிணாமூர்த்தியின் நகைச்சுவை உண்ணாவிரதம் (41)

"தலைவரே, மோசம் போயிட்டோம்"

"என்னய்யா அது?"

"உளவுத் துறை ரிப்போர்ட்படி நமக்கு நாப்பதுலயும் நாமம் தானாம்"

"என்னய்யா சொல்ற?"

"ஆமாம். சாதாரணமாவே நம்ம ஆட்சி மேல மக்களுக்கு ஏகக் கடுப்பு. கடைசியா இலங்கை பிரச்னை வேற இப்போ ரொம்பவே ஆட்டிப்படைக்குது"

"இப்படி ஆவும்னு முன்னமே தெரிஞ்சிருத்ந்தா 'நாங்க ஆட்சிக்கு வந்தா தனி ஈழம் அமைய ஆதரவளிப்போம்னு' சொன்ன ஆண்டிப் பண்டார கட்சிக்கிட்ட ஓடியிருக்கலாமேய்யா"

"ஹூம். டூ லேட் தலைவரே. அந்தம்மா தானாவே அந்த அறிக்கையெல்லாம் விட்டுடிச்சி. நீங்க என்னடான்னா 'நண்பரு. துரோகி, போராளி, பெருச்சாளின்னு' காமெடி பண்ணிட்டு இருக்கீங்க. நீங்க பண்ற காமெடியினால வடிவேலுவுக்கு இப்போவெல்லாம் படத்துலே சான்ஸே கெடைக்கலயாம். எப்பவும் ஆட்சி போனப்புறம் படத்துக்கு வசனம் எழுதுறேன் பேர்வழின்னு படுத்தி எறிவீங்க. இனிமே காமெடியனா நடிங்க. சூப்பரா பொருந்திடும்"

"என்னய்யா செய்யலாம்?"

"பேசாம கூட்டணியில இருந்து வெளில வந்திடுங்க. ரெண்டு மூணு சீட்டாவது ஜெயிக்கலாம். புள்ள, பேரனெல்லாம் டெபாசிட் காலியானா நல்லாவா இருக்கும்?"

"இனிமே வர முடியாதேய்யா"

"உங்களுக்கா தெரியாது? உண்ணாவிரதம் இருக்கேன்னு உட்காந்திடுங்க. அவங்களாவே தொறத்திடுவாங்க. 'ஐயையோ.. கொல்றாங்களே'ன்னு சவுண்டு விட்டுக்கலாம்"

"சூப்பர் ஐடியாய்யா. வாழ்க்கையிலயே இப்போ தான் உருப்படியா ஒரு யோசனை சொல்லிருக்க"

'ஐயையோ கொல்றாங்களே.. ஐயையோ கொல்றாங்களே' - சப்தத்தைக் கேட்டு உடனடியாக இத்துப் போன டி.வி & பேரன் டி.வி.களில் 'அராஜக மத்திய அரசு அட்டகாசம்' என்று செய்தி ஓடுகிறது.

Wednesday 22 April, 2009

தமிழ் எங்கள் உயிர் மூச்சு(40)

தேர்தல் அறிக்கைகளை இரண்டு பிரதான கட்சி இணைய தளங்களில் ஏற்றியிருக்கிறார்களா என்று பார்க்க வலம் வந்தேன்.

தி.மு.க. தனது 28 பக்க அறிக்கையை ஆங்கிலத்தில் (மட்டும்) வைத்திருக்கிறார்கள். (தமிழ்ப்பற்றாளர் கட்சியல்லவா அதான்!)

அ.தி.மு.க. 48 பக்க அறிக்கையை தமிழிலும், ஆங்கிலத்திலும் வைத்திருக்கிறார்கள்.

என்னாது?!(39)


mdmkonline.com

mdmkonline.com வெப்சைட் பக்கம் போனப்ப கண்ணுல பட்டுச்சு!

ம.தி.மு.க. கூட்டணியாம்!

ஹிஹி, அன்புச் சகோதரி இத பாக்கணும். அப்புறம் இருக்குது கதை!

Monday 20 April, 2009

'மேற்படியான்' மண்டயப் போட்டா வருந்துவீங்களா மாட்டீங்களா? (38)

வயசாக வயசாக கிழத்துக்கு ரொம்பவே புத்தி பேதலிச்சிடுச்சுன்னு ரொம்ப பேரு சொல்றாங்க.

அட போங்கப்பா, என்னைக்கு கிழவன் ஒழுங்கா பேசியிருக்காரு, இப்போ மாத்தி பேச.

முன்னவெல்லாம் வாரத்துக்கு ஒரு தபா அந்தர் பல்டி, இப்பவெல்லாம் நொடிக்கு ஒரு தடவ அந்தர் பல்டி.

கண்றாவி இங்கிலீஸ் புரிஞ்சு தொலைக்கலைன்னா வந்த டி.வி.காரன் கிட்ட தமிழிலே கேள்வி கேளுப்பான்னு சொல்லித் தொலைக்க வேண்டியது தானே.

இப்போ திரித்து கூறீவிட்டார்கள்ன்னு சொல்லி ஒட்டு மொத்த இந்தியாவே இந்த ஆளப் பாத்து கை கொட்டி சிரிக்குது.

அது சரி, ஒரு நபர் உயிரோடு இருக்கும் போதே அவரை கொலை செஞ்சா வருந்துவேன்னு சொல்றதையெல்லாம் என்ன செய்யலாம்?

அதே கேள்விய இவரப் பாத்து அடுத்தவங்க கேக்குறதுக்கு எம்புட்டு நேரமாவும்?