ஐரோப்பியாவின் யூடெல்சாட் என்ற நிறுவனத்துக்காக கடந்த மாதம் 20ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்திய டபிள்யு.டு.எம் செயற்கைகோள் செயலிழந்துவிட்டதாக தெரிகிறது. இதை சரி செய்யும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இது இஸ்ரோவின் வளர்ச்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இஸ்ரோ கடந்த 2006ல் ஐரோப்பாவின் ஈ.ஏ.டி.எஸ் என்ற நிறுவனத்துக்கு வர்த்தக ரீதியான செயற்கை கோள் ஒன்றை வடிவமைத்து செயல்படுத்தி தர ஒப்பந்தம் செய்து கொண்டது.
இதன்படி கடந்த டிசம்பர் 20ஆம் தேதி டபிள்யு.டு.எம் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது. இந்நிலையில் கடந்த ஜனவரி 22ம் தேதி இரவிலிருந்து இது செயல்படவில்லை. தங்களின் சேவைகளை அது பூர்த்தி செய்யவில்லை. அது முற்றிலும் செயலிழந்துவிட்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
சம்பந்தப்பட்ட சாட்டிலைட் வெற்றிகரமாக ஏவப்படும்போதெல்லாம் கூப்பிட்டு பாராட்டப்படும் விஞ்ஞானிகளை இப்போது கூப்பிட்டு திட்டலாமா?
நம்மூர் ரோடு கூட ரெண்டு மூணு மாசம் தாங்குமய்யா. இவ்வளவு செலவு செஞ்சு விட்ட ராக்கெட்டு பத்து நாளிலேயே புட்டுக்கிச்சே?
1 comment:
Annasami enga aala kanum?
Post a Comment