Wednesday, 4 February 2009

ஹர்த்தால் பிசிபிசுத்திடுச்சாம்(18)

தினமலர் பத்திரிகை நம்ம தட்சிணாமூர்த்தியை விட பயங்கர கப்ஸாவாக இருக்கும் போலிருக்கிறது.

நேற்றைய பந்த், சரி, ஹர்த்தாலின் போது தமிழகத்தில் 100 சதவிகிதம் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்று இன்றைக்கு செய்தி வெளியிட்டிருக்கிறது

அவனவன் வூட்டுக்குள்ளே உட்காந்து இருந்தான். அநேகமா அடுத்த பத்து மாசத்தில தமிழ்நாட்டில ஜனத் தொகை அதிகமானாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல. போதாக்குறைக்கு நம்ம 'போர்க்காட்டார்' வேற ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிச்சு கரண்ட் கட் பண்ணியிருந்தாரு. (இல்லைன்னா மட்டும் அப்படியே 24 மணி நேரமும் கரண்ட் வந்திடும்!)

ஒருவேளை தினமலரை வளைகுடாநாடுகளில் இருந்து பிரிண்ட் பண்ணுறாங்களோ?

No comments: