Saturday 14 March, 2009

என்னது, தொப்புள் கொடி உறவா?(37)

தொப்புள் கொடி உறவு

- இந்த ஒரு வார்த்தை கடந்த சில மாதங்களாக பாடாய்ப் பட்டு வருகிறது.

அதென்னப்பா தொப்புள் கொடி உறவு?

நாமும் தமிழ் தான் பேசுகிறோம், அவனும் தமிழ் தான் பேசுகிறான். அதனால தொப்புள் கொடி உறவு என்கிறீர்களோ?

பிரிட்டிஷ்காரனும், அமெரிக்காகாரனும் இதே ரீதியில் தான் தொப்புள் கொடி உறவு போல.

உலகத்திலே எங்கே தமிழனுக்கு பிரச்னை என்றாலும் உடனடியாக இந்த தொப்புள் கொடி உறவு டயலாக் ஆரம்பித்து விடுகிறது.

அடப்பாவிகளா.

உங்களுக்கு கஷ்ட காலம் வரும் போது தான் தொப்புள் கொடி உறவு என்று ஒன்று இருக்கிறதாக தெரிய வருகிறதா?

நல்லா சம்பாதித்து கொழிக்கும் போதெல்லாம் நம் தமிழ் இன தொப்புள் கொடி உறவுகள் அங்கே தாய்த் தமிழகத்தில் சிரமப்பட்டு வருகிறார்களே, அவர்களுக்கு உதவுவோம் என்று என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா?

மலேசியாவில், இலங்கையில், சிங்கப்பூரில் என எங்கே போனாலும் எங்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களை நீங்களே மூன்றாம் தர அடிமைகளாகத் தானே நடத்தி வந்தீர்கள்?

நீங்கள் நன்றாக இருந்த காலத்தில் எங்கள் தாய்த் தமிழகத்திற்கு உங்களால் தம்படி பைசா வருமானம் உண்டா?


ஜப்பான்காரனும், அமெரிக்காகாரனும் தங்களுக்கு சம்பந்தமில்லாத ஆசிய நாடுகளில் கூட தங்கள் சொந்த காசை செலவிட்டு பாலங்கள், பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள் என்று பலவற்றை செய்து கொடுத்திருக்கிறார்கள். அப்படி நீங்கள் ஏதாவது இங்கே கிழித்திருக்கிறீர்களா?

அதாகப்பட்டது நீங்கள் நன்றாக இருக்கும் காலத்தில் எங்களை கேவலமாகத் தான் பார்த்தீர்கள், பார்க்கிறீர்கள். உங்களுக்கு கஷ்டம் வரும் போது மட்டும் நாங்கள் எங்கள் கவலைகளையெல்லாம் மறந்து விட்டு உங்களௌக்கு உதவ ஓடி வர வேண்டும்.

என்னங்கப்பா நியாயம் இது?

2 comments:

Anonymous said...

நல்ல கேள்விகள்.

பாகிஸ்தானிலும் இந்தி பேசுபவன், பஞ்சாபி, ஹிந்து எல்லாரும் இருக்கிறார்கள் அதற்காக அவர்களை தொப்புள் கொடி உறவு என்று கூறி உதவ முடியுமா?

இலங்கை தமிழர்களே நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள் அல்ல என்று கூறும் போது இவர்களுக்கு மட்டும் அவர்கள் எப்படி தொப்புள் கொடி உறவு ஆனார்கள் என்று விளங்கவில்லை.

Anonymous said...

அட,பாகிஸ்தான்காரனை தொப்புள் கொடி உறவு என்று சொல்வது கூட பொருத்தமாக இருக்கும்.