Wednesday 21 January, 2009

கேள்வி(யும் நானே), பதில்(-ம் நானே) (4)

பத்திரிகையாளர்களை என்ன தான் திட்டினாலும், காறித் துப்பினாலும், நீதான்டா கொலைகாரன் என்று புழுதி வாறித் தூற்றினாலும் அவர்கள் எதற்கும் அசராமல் அடுத்த தபா பார்க்கும் போது என்னை கோபமூட்டும்படியான கேள்விகளை கேட்டுத் தொலைக்கிறார்கள். பத்திரிகையாளர்களுக்கு நான் ரொம்ப நெருக்கம் என்ற ஒரு இமேஜை என்னுடைய அல்லைக்கை பத்திரிகையாளர்களைக் கொண்டு உருவாக்கி வைத்திருக்கிறேன். இருந்தாலும் அதெல்லாம் செல்லுபடியாகவில்லை. எனவே அடிக்கடி, அதுவும் எனக்கு பிரச்னை என்று வரும் போதெல்லாம் எனக்கு நானே கேள்வி கேட்டு அதற்கு பதிலாக அனைவரையும் திட்டி எழுதுவேன் என்று அறிவித்துக் கொள்கிறேன்.

நேரடியாக பத்திரிகையாளர்களை சந்திக்கும் போதெல்லாம் நான் டென்ஷனாகிவிடுவதால் இந்த ஏற்பாடு. ஆனால் நான் பத்திரிகையாளர்களுக்கு ரொம்ப நெருக்கமாக்கும்!

1 comment:

Anonymous said...

Superu